அரவக்குறிச்சி, மே 29: அரவக்குறிச்சியில் உள்ள அங்கன்வாடிமையங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைப்பதாலும், கூடுதல் மின்விசிறி வசதி ஏற்படுத்தி தர பெற்றோர்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியில் 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு குழந்தைகள் மையத்திலும் தலா 30 குழந்தைகளுக்கும் மேல் தொடக்கக் கல்வி பயின்று வருகின்றனர். குழந்தைகள் மையத்தில் மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் குழந்தைகளை தூங்க வைப்பது வழக்கம். ஆனால் அரவக்குறிச்சியில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் போதிய அளவு மின்விசிறி இல்லை என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தற்போது கோடை வெப்பம் வாட்டி வதைப்பதாலும், போதிய அளவு மின்விசிறி இல்லாததாலும் குழந்தைகளின் உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறி அதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அரவக்குறிச்சியில் உள்ள குழந்தைகள் மையத்தை அங்கன்வாடி அதிகாரிகள் ஆய்வு செய்து தேவைக்கேற்ப மின்விசிறிகளை அமைத்து தர வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கூடுதல் மின்விசிறி அமைக்க வேண்டும்
0
previous post