மதுரை, ஆக.7: மதுரை காந்தி மியூசியத்திற்குள் அரசு மியூசியம் இயங்கி வருகிறது. இங்குள்ள பழங்கால பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் என தினம் சுமார் நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மியூசியம் சார்பில் மாணவ,மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்படுகிறது. இதில் ‘இயற்கையும் மனிதனும்’ என்ற தலைப்பில் கலை கண்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கண்காட்சியை பள்ளி மாணவ,மாணவிகள் கண்டுகளித்தனர். மியூசியத்தின் காப்பாட்சியர் மருதுபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.