தேன்கனிக்கோட்டை, செப்.5: கெலமங்கலம் அருகே போடிசிப்பள்ளி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ராமச்சந்திரன் எம்எல்ஏ வாங்கினார். கெலமங்கலம் அருகேயுள்ள போடிசிப்பள்ளியில் செயல்படும், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும், பள்ளியில் ₹6.10லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையற்கூடத்தை திறந்து வைத்தார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டிகளை தொடங்கி வைத்தார். விழாவில், கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஸ்பாபு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.