நாகர்கோவில் , ஆக. 26: சந்திராயன் 3 வெற்றிகரமாக தரை இறங்கியதை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாவல் காட்டில் இயங்கும் அரசு மாதிரி பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். பள்ளியின் முதுகலை ஆசிரியர் சேவியர் வரவேற்றார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பணி நிறைவு பெற்ற இஸ்ரோ திட்ட துணை இயக்குனர் முனைவர் தங்க புதியவன் கலந்து கொண்டு விண்வெளி சார்ந்த கருத்துக்களை எடுத்துரைத்து விண்வெளி சார்ந்த மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கங்களை அளித்தார். பள்ளியின் முதுகலை கணினி ஆசிரியர் சுரேந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.