திருப்பூர், ஆக. 17: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். இவர் கல்லூரி கருத்தரங்க கூடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த மருத்துவ மாணவியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் நேற்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் கருப்பு பட்டை அணிந்தும், கொலைக்கு நீதி கேட்டும், இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாகவும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.