கரூர், டிச. 13: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி மருத்துவமனையில் ஏராளான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை, அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்துக்கு குறைவின்றி ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வாரவிடுமுறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் இவர்களின் போராட்டம் நீடித்த நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணியாளர்களிடம் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், இந்த பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.