பொள்ளாச்சி, ஜூலை 5: பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுபத்திரா (65). இவர் கடந்த 27 ம் தேதி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனக்கு தெரிந்து நபர், இலவசமாக நகைகள் கொடுப்பதாகவும், நகை போட்டிருந்தால் கொடுக்க மாட்டார்கள் என நம்பும்படியாக கூறி, அந்த மூதாட்டியிடம் இருந்த மூன்று பவுன் நகையை நூதன முறையில் பறித்து சென்றார்.
இதுகுறித்து மூதாட்டி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இப்புகாரின் பேரில் போலீசார், மூதாட்டியிடம் நூதனமாக பேசி நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரித்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவை கண்காணித்து ஆய்வு மேற்கொண்டனர்.