சாத்தூர், ஜூன் 2: சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாணிக்கம் தாகூர் எம்பி பிறந்த நாளை முன்னிட்டு பழைய அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் மற்றும் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு பெட்சீட், பிரட், பிஸ்கட், பழங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் மற்றும் தலைமை மருத்துவர் கேசவன், சாத்தூர் கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா, சாத்தூர் மேற்கு வட்டார தலைவர் கும்கி கார்த்திக், மாவட்ட செயலாளர் சந்திரன், மேற்கு மாவட்ட வட்டார துணைத் தலைவர் முத்துவேல், சாத்தூர் மேற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரன், சாத்தூர் தெற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், நகர துணை தலைவர் வெள்ளைச்சாமி, வட்டார செயலாளர் சத்திரப்பட்டி லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.