மதுரை, ஆக. 7: மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், கொட்டும் மழையில் மருத்துவம் தொடர்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு பொதுமக்கள் கொட்டும் மழையில் காத்திருக்கிறீர்கள். மருத்துவத்திற்காக இவ்வளவு நேரம் பொதுமக்கள் காத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மதுரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆரம்ப சுகாதாரநிலையங்கள் விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் வெங்கடேசன், புதூர் பூமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூர்யகலா கலாநிதி, ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன்,ஒன்றிய செயலாளர் மதிவாணன், சிறைச்செல்வன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்தியபிரகாஷ், பேரூர் சேர்மன்கள் ஜெயராமன், ரேணுகாஈஸ்வரி, பகுதி செயலாளர் சசிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.