சேலம், ஆக.30: சேலம் இரும்பாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் 29வது பட்டமளிப்பு விழா இன்று (30ம்தேதி) மாலை நடக்கிறது. மருத்துவக் கல்லூரியின் டீன் (பொ) மணிகாந்தன் வரவேற்கிறார். மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியாசாகு, சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் 2018-19ம் கல்வி ஆண்டில் படித்து முடித்த 100 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.