ஈரோடு, மே 24: ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல செயலர் ஜீவா ராமசாமி தலைமை தாங்கினார். இதில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடன் துவங்கி பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்து துறையில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அன்றைய தேதியிலேயே ஓய்வூதிய பலன்களை முழுமையாக வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.