ராமேஸ்வரம், ஆக.12: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. ராமேஸ்வரம் அரசு பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1981-87ல் படித்த முன்னாள் மாணவிகள் படித்த பள்ளியில் ஒன்றுகூடி சந்திக்கும் நிகழ்வை நடத்தினர். தலைமையாசிரியர் தங்கம்மாள் சந்திப்பு கூட்டத்திற்கு தலைமையேற்றார். முன்னாள் மாணவி இந்திராணி முன்னிலை ஏற்று நிகழ்ச்சியை நடத்தினார்.
தாங்கள் படித்த பள்ளியில் 37 வருடங்களுக்கு பிறகு மாணவிகள் ஒருவரை ஒருவர் சந்தித்த ஆனந்தத்தில் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக சந்திப்பு கூட்டத்தை கேக் வெட்டி கொண்டாடினார்.தற்போது பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி ஊக்குவித்தனர். மேலும் கணினி ஒன்றை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினர்.