காங்கயம், ஜூன் 24: ஊதியூர் அடுத்துள்ள தம்மரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி முருகாயி (65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காங்கயம் தாராபுரம் ரோடு துண்டுகாட்டு பிரிவு அருகே ரோட்டை கடக்க முற்பட்டபோது அரசு பஸ் மோதியது. தொடர்ந்து பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிசிக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.