தர்மபுரி, மே 23: சேலம் நாராயணசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி மகன் கண்ணன் (20), தொழிலாளி. நேற்று முன்தினம், கடைக்கு விடுமுறை என்பதால், கண்ணன் தனது நண்பர்களுடன் டூவீலரில் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, அவர்கள் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் முத்தையன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
அப்போது ஏரியூர் பழையூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே கண்ணன் வந்தபோது, எதிர்பாராத விதமாக அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் விரைந்து வந்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.