நல்லம்பள்ளி, ஜூன் 15: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, ஆஞ்சநேயர் கோயில் அருகில், சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி வாகனங்கள் செல்கின்றன. நேற்று காலை அரசு பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு, தொப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் அருகே வந்த போது, வலது புறம் திரும்பிய போது எதிர்பாராத விதமாக, எதிர் திசையில் வந்த மினி லாரி மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய அரசு பஸ், சாலையோர மரத்தில் மோதி நின்றது. இதில் மினி லாரியில் வந்த 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ்-மினி லாரி மோதி 3 பேர் காயம்
42
previous post