ஏர்வாடி, ஆக.22: திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மதியம் 2.20 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை வடசேரியை சேர்ந்த டிரைவர் பாண்டியன் (57) என்பவர் ஓட்டினார். பஸ்சில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நாகர்கோவிலுக்கு டிக்கெட் எடுத்து பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணித்தார். மாலை 4.30 மணிக்கு வள்ளியூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்த போது முதியவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அ வர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பஸ் நடத்துனர் ரமேஷ் (47) வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் மாரடைப்பு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
அரசு பஸ்சில் பயணித்த முதியவர் பலி
previous post