ஆண்டிபட்டி, ஜூலை 22: ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளி முன்பாக உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்வித்துறை அதிகாரிகள் வரும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக்கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.