தேனி, ஆக. 24: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர தினவிழாவையொட்டி மாநில அளவிலான சிறப்பு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில், 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் செ.பிரசன்னஸ்ரீ, மாநில அளவில் 3ம் இடம் பெற்று பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றார்.
மாநில அளவில் 3ம் இடம் பெற்ற மாணவர் பிரசன்னஸ்ரீயை கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டினர். அதே போல் தேனி வட்டார அளவில் அரசுத்துறை சார்பில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் பிரியதர்ஷன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.