சேலம், ஜூலை 2: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் கோவை கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர். சண்முகநாதன் மற்றும் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் அறக்கட்டளை சார்பில், மேல்நிலைக்கல்வி முடித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான அரசு பள்ளி மாணவ -மாணவிகளின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில் நீட் நுழைவுத்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் கடந்த 3 ஆண்டுகளாக சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. 2026 நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், ரிப்பீட்டர்ஸ் கோர்ஸ் ஜூலை 2வது வாரத்தில் தொடங்க உள்ளது. பயிற்சி பெற விரும்பும் மாணவ -மாணவியர் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். மையத்தில் தங்கும் விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடைய விருப்பமுள்ளவர்கள் வரும் 12ம் தேதி(வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சண்முகநாதன் கனகவல்லி இலவச நீட் பயிற்சி மையம், 3/205 எம்ஜிஆர் நகர், மகுடஞ்சாவடி சங்ககிரி சேலம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி மையம்
0