வேதாரண்யம், நவ.22: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம் வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 140 பேருக்கும் மழைக்காலத்தில் பள்ளிக்கு வருவது தடைப்படக்கூடாது என்பதை முன்னிட்டு முன்னிட்டு குடைகள் வழங்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடை வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் இந்திரசித்தன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வளையநகர் லட்சுமணன் மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் குடைகள் அன்பளிப்பாக வழங்கினார். மழை காலத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்குமே குடை வழங்கியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் மாணவி கோபிகா நன்றி தெரிவித்தார்.