திருப்பூர், செப்.3: திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை, ஈரோடு, சேலம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 55 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க நபர் ஒருவர் பேருந்து நிலைய நுழைவாயிலில் இரும்பு நடைபாலத்தின் அருகே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.