ராமேஸ்வரம், ஆக.6: அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்னி பாத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக அக்னி பாதை திட்டத்தில் மாணவர்கள் சேர்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கணேச பாண்டியன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேஷ் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய விமானப்படை அலுவலர் சார்ஜன்ட் கணிக்குமார் அக்னி பாதை திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சேர்வது குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி ஒருங்கிணைத்தார்.