காவேரிப்பட்டணம், ஜூலை 30: காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு நாட்குறிப்பேடு மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரண பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குப்புசாமி, சின்னசாமி, பாலமுருகன் மற்றும் வட்டார வள மைய காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கி, மாணவர்களுக்கு நாட்குறிப்பேடுகள் வழங்கினார். இடைநிலை ஆசிரியை அருணாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களை அறிவியல் ஆசிரியர் பாலுசாமி வரவேற்றார். ஆங்கில ஆசிரியை அனிதா கிரிஷ்டி மற்றும் கணித ஆசிரியர் மஞ்சுநாதன், இடைநிலை ஆசிரியர்கள் காயத்ரி, சுகந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள்
44
previous post