அரூர், ஏப்.4: கன்னியாகுமரியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி 5 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் பல்ேவறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் சுமன், ஜூனியர் 40 கிலோ எடை பிரிவில் ஆயுதஜோடி சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு, இறுதி போட்டியில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவன் சுமனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்தரா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்து குமார், பொன்னுசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவனையும், அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சிலம்பம் மாஸ்டர் சுரேஷ், சங்கர், முருகேசன் ஆகியோரை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
அரசு பள்ளி மாணவன் சாதனை
49
previous post