ஈரோடு,ஜூன்20: ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் விருப்ப மாறுதலுக்கு வருகிற 25ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கல்வி தகவல் மேலாண்மை முகமையில் இணையத்தில் விருப்ப மாறுதல் கோரி வருகிற 25ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை பெற்ற பின் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.