நாமகிரிப்பேட்டை, செப்.28: நாமகிரிப்பேட்டை அடுத்த திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக 6 வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. இப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்ட வேண்டும் என பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில்,கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பியிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, நபார்டு திட்டத்தின் கீழ் ₹1.28 கோடி மதிப்பில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி கலந்துகொண்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சேகர், பெற்றோர் சங்க தலைவர் பாண்டியன், பழனிச்சாமி மற்றும் வேல்முருகன், ஆனந்தன், செல்வம், வினயத், சாந்தப்பன், அய்யனார், சுப்பிரமணி, ராமசாமி, உழவன் நண்பன் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.