தர்மபுரி, மே 30: தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 25 ஆண்டுகளுக்கு முன்பு 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் கடந்த 2000ம் ஆண்டில் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த 21 ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
தொடர்ந்து, மாணவர்கள் தங்களின் பள்ளி பருவகால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசி மகிழ்ந்தனர். பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர், முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.