தேன்கனிக்கோட்டை, மே 28: தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் ஒன்றியம் ஆனேகொள்ளு ஊராட்சியில் உள்ள தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘பெற்றோர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க எளிய வடிவில் கூகுல் பார்மில் சேர்க்கை விண்ணப்பத்தை தயார் செய்து, அதை கியூ ஆர் கோடாக மாற்றி பள்ளிக்கு வெளிப்புற கதவிலும், மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும் வைத்துள்ளோம். பெற்றோர்கள் அதை ஸ்கேன் செய்து, கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். மீண்டும் பள்ளி திறக்கும்போது நேரிடையாக வந்து மற்ற ஆவணங்களை கொடுக்கலாம்,’ என்றனர்.