கடத்தூர், ஜூன் 11: கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அறிவியல் ஆசிரியர் நடராஜன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழலில் மாணவர்களின் பங்களிப்பு, பசுமை இல்லா வாயுக்களின் விளைவுகள், பூமியை பாதுகாக்க, மாசில்லா காற்று பெற மரக்கன்றுகளை நடவு செய்து சிறப்புரையாற்றினார். பள்ளியளவில் சுற்றுச்சூழல் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கணபதி, சக்திவேல், விக்னேஷ், ஆனந்தா, சுதா உள்ளிட்ட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
0