திருப்புத்தூர், ஆக.22: திருப்புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று உயர் கல்வி வழிகாட்டு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தவமணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும், 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியர் ரவீந்திரன், மாயக்கண்ணன் ஆகியோர் உயர்கல்வி திட்ட விளக்க உரையாற்றினர். தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கு தயார்படுத்துதல், பட்டப்படிப்புக்கு முன்னெடுத்தல், தொழில் தேர்வுகள், கல்லூரி தேர்வுகள் குறித்தும் காணொளி மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆசிரியர்கள் பாண்டியன், முத்துப்பாண்டி ரேணுகா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டு கூட்டம்
previous post