ஊத்தங்கரை, ஆக.19: ஊத்தங்கரை அருகே முசிலிக்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ரூ.1லட்சம் மதிப்பிலான பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்ட பொருட்களை பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் அன்பு வரவேற்றார்.
உதவி ஆசிரியர்கள் ராஜ்குமார், அஜிமுதின், சங்கீதா, ராஜ்குமார், பழனியம்மாள், மணிமேகலை, திலகவதி, ஊராட்சி தலைவர் கலீல், ஊராட்சி, உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக பணி நிறைவு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மகனூர்பட்டி வரதராசுலு பங்கேற்றார். அவர் 1962ல் முதன் முதலில் இந்த பள்ளியில் தான் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தான் முதலில் பணியாற்றிய இந்த பள்ளிக்கு மாணவர்களின் நலன் கருதி, ரூ.1லட்சம் மதிப்பிலான பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.