திருத்துறைப்பூண்டி, மே 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 66 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 2023-24ம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கும் வழங்குவதற்கு பள்ளியில் கொண்டு சேர்க்கப்பட்டது. பள்ளி திறக்கும் நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு ஏதுவாக நேற்று பள்ளிகளில் நேரில் வட்டார கல்வி பாலசுப்பிரமணியன், அறிவழகன் முன்னிலையில், அலுவலகப் பணியாளர்கள் வழங்கினார்கள்.