திருப்பூர், ஆக.5: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில், மாநகராட்சி 34வது வார்டு கருமாரம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மண்ணரை அரசு நடுநிலைப்பள்ளிகளில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்மார்ட்’ வகுப்பறையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான க.செல்வராஜ் தலைமை வகித்து வகுப்பறைகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், பகுதி செயலாளர் மு.க.உசேன்,மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பி.ஆர்.செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், நிர்வாகி சிவபாலன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.