தர்மபுரி, ஜூன் 3: பென்னாகரம் அருகே, பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று கோடை விடுமுறைக்கு பின் வகுப்புகள் தொடங்கியது. இதில், பென்னாகரம் வட்டாரக்கல்வி அலுவலர் பரமசிவம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முதல் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கி தொடங்கி வைத்தார். 8ம் வகுப்பு முடித்து 9ம் வகுப்பு சேரவுள்ள மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், உதவி ஆசிரியர்கள் ஜவகர், ஜான்மா, சுரேஷ், கார்த்திகேயன், தாமோதரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள், காலை சிற்றுண்டி மற்றும் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்,
அரசு நடுநிலைப்பள்ளியில் பாடப்புத்தகம் விநியோகம் வட்டார கல்வி அலுவலர் வழங்கினார்
0
previous post