அரியலூர், ஆக. 6: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரத்தினசாமி கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கைகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில்ல் வரவேண்டும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்ச்சி அல்லது தோல்வி. விண்ணப்பக்கட்டணம் 50ஒ, சேர்க்கை கட்டணம் ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.1850-, இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.1950. நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் -16.08.20. மேலும் விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரியலூர; – 9499055877, 04329-228408, அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் – 9499055879 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.