திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்காக இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இங்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் எஸ்சி, எஸ்டி பிரிவில் சர்வேயர், மெஷினிஸ்ட், ரெப்ரிஜரேட்டர், ஏசி டெக்னீஷியன் மற்றும் இன்பிளான்ட் லாஜிஸ்டிக் அஸிஸ்டணட் போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று உடனடி வேலை வாய்ப்பு பெறலாம். இங்கு பயிலும் பயிற்சியாளர்களுக்கு ரூ.750 மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் மாதந்தோறும் ரூ.1000 மாதாந்திர உதவித்தொகையும், அரசு வழங்கும் பல சலுகைகளும் உள்ளன. எனவே உடனடியாக நேரடி சேர்க்கைக்கு க.ராஜலஷ்மி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் 8248738413, 7904159767, 9444923288, 9940258464 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.