சிவகங்கை, ஆக. 5: சிவகங்கை முத்துப்பட்டி அரசு ஐடிஐல் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை அரசு ஐடிஐல் 2023ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடந்தது. தொடர்ந்து நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் ஆக.16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரீசியன், பிட்டர், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர்(கோபா) மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மெக்கானிக் எலெக்ட்ரில் வெகைல், அட்வான்ஸ்டு சிஎன்சி மெக்கானிக் டெக்னிசியன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மேனுபாக்டரிங் டெக்னிசியன் ஆகிய தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். பற்றவைப்பவர் (வெல்டர்) தொழிற் பிரிவில் சேர எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் சேரலாம்.
சிவகங்கை நேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், கலர் போட்டோ 5, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்கள் கொண்டு வர வேண்டும். ஐடிஐல் சேரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க வழிவகை செய்யப்படும். பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சிக்காலம் முடிந்தவுடன் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9003736688, 9944887754, 9500206460, 9942099481 என்ற செல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.