கிருஷ்ணகிரி, ஜூன் 25: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மூத்த குடிமக்கள் செயலியை தரவிறக்கம் செய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மூத்த குடிமக்கள், மூத்த குடிமக்கள் செயலியை அதற்கான இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கைபேசி செயலியில் மூத்த குடிமக்கள் தேவையான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அருகில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய, மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் இந்த மூத்த குடிமக்கள் கைபேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மூத்த குடிமக்களும், மூத்த குடிமக்கள் கைபேசி செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.