பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 12: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கல்லூரியின் முதல்வர்(பொ) ரவி தலைமையில், மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. மாணவர்கள் சேர்க்கையின் போது, அனைத்து துறைத்தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் உடனிருந்தனர். கடந்த 10ம் தேதி அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள், வரும் 15ம் தேதி வரை கலந்து கொண்டு சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம் என கல்லூரி முதல்வர்(பொ) ரவி தெரிவித்துள்ளார்.
அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
86
previous post