லால்குடி, மார்ச் 1: குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் மற்றும் இயற்பியல் துறை மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார், தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்து கூறி சிறப்புரையாற்றினார். மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டார். இயற்பியல் துறை தலைவர் முனைவர் ஜெயபிரகாஷ் வரவேற்று பேசினார். இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் அனிதா நன்றி கூறினார். கணினி அறிவியல் துறை தலைவர் அசோக்குமார், ஆங்கிலத்துறை தலைவர் வீரமணி மற்றும் வணிக மேலாண்மை துறைத் தலைவர் முனைவர் சுலைமான் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.