ஓசூர், ஜூன் 19: ஓசூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், 2025-2026ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் பாக்கியமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாளை (20ம் தேதி) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. எனவே, விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும், கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது, இணையவழி விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரசு கல்லூரியில் சேர்க்கை கலந்தாய்வு
0
previous post