திருத்துறைப்பூண்டி, ஜூன் 26: திருவாரூர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகாதின வாரத்தை முன்னிட்டு நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மனவளக்கலை திருத்துறைப்பூண்டி மன்றத்துடன் இணைந்து சர்வதேச யோகா தினம் முதல்வர் தலைமையில் கொண்டாடப்பட்டது. முன்னதாக நாட்டு நலப்பணித்திட்டஒருங்கிணைப்பாளர் நந்தினி வரவேற்றார். இதில் மனவளக்கலை மன்றத்தலைவர் சுதந்திரமணி, மன்ற பேராசிரியர் முருகையன் ஆகியோர் யோகா விளக்கங்கள் அளிக்க மன்ற உதவி பேராசிரியர் இராஜேந்திரன் செயல் விளக்கமளித்தார்.