சேந்தமங்கலம், ஆக.12: சேந்தமங்கலம் அரசு கலை கல்லூரியில், தமிழ்த்துறையின் இலக்கிய மன்றம் சார்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா, சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்த்துறை தலைவர் கலையரசி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பாரதி கலந்துகொண்டு, செல்வம், பெரியசாமி எழுதிய கைகளுக்குள் சிக்காத காற்றே என்ற கவிதை நூலை வெளியிட்டார். உடற்கல்வி இயக்குனர் ரவி, தேனருவி வானொலி அறிவிப்பாளர் கவிமயில் புத்தகத்தை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து இன்றைய மாணவர்களிடம் அறிவு தேடல் குறைகிறதா? வளர்கிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக திருவாசகமணி சுப்பிரமணியம் செயல்பட்டார். அறிவு தேடல் குறைகிறது என்ற தலைப்பில் கந்தசாமி, செல்வி, தனுசியாவும், அறிவு தேடல் வளர்கிறது என்ற தலைப்பில் உமா மகேஸ்வரி, கவிஞர் செல்வம், பெரியசாமி ஆகியோரும் பேசினர். கௌரவ விரிவுரையாளர் தேன்மொழி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர்கள் சிவஜோதி, ஜமுனா, மோகனா, பூங்கோதை, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.