தர்மபுரி: தர்மபுரி அரசு கலைக்கல்லூரி சார்பில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு கலைக் கல்லூரியிலிருந்து இலக்கியம்பட்டி பஸ் நிலையம் வரை பேரணி நடந்தது. பேரணியை கல்லூரி முதல்வர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவு துறை தலைவர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அதியமான்கோட்டை போலீசார் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சந்திரசேகரன், ராஜாராம் மற்றும் கயல்விழி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதை தொடர்ந்து கலையரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினர்.