அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணாக்கர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோருக்கு
இன்றும், பொதுகலந்தாய்வு பிஏ ஆங்கிலம், பி.எஸ்சி கணிதம், பி.காம், பி.காம் சிஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 4ம் தேதியும், பிஏ தமிழ் பாடப்பிரிவுக்கு 6ம் தேதியும் நடைபெறவுள்ளது. மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும்போது ஆன்லைன் விண்ணப்பம் 10, 11, 12 ஆகிய வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மின்னணு சாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் புகைப்படம் 5 ஆகியவற்றுடன் கலந்தாய்விற்கு காலை 9 மணிக்கு கல்லூரிக்கு வருமாறு கல்லூரி முதல்வர் முத்துபாண்டியன் தெரிவித்துள்ளார்.