கோவை, ஜூன் 27: கோவை அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இதனை கல்லூரியின் முதல்வர் ஏழலி தலைமை துவக்கிவைத்தார். இதில், கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், மாணவ, மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியை எடுத்தனர்.
தொடர்ந்து அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கல்லூரி வளாகத்தில் பேரணி நடத்தி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாட்டை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ரவிக்குமார், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.