தேனி, மே 31: தேனி அருகே ஊஞ்சாம்பட்டியில் கிருஷ்ணாநகர் 3வது தெருவில் குடியிருப்பவர் சுப்பிரமணி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோமதி. பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தங்களது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இருவரும், கடந்த 25ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, காஞ்சிபுரம் சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கோமதி, அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.