கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மீன்வளத்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் நந்தகுமார், பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் ஹேமா நந்தினிதேவி, தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் பெருமாள், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மணி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் கோபால கண்ணன், தமிழ்நாடு நெடுங்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் பழனியம்மாள் பேசினார்.