சிவகங்கை, செப்.3: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி வைத்து பேசினார். இதில் மகளிர் அணி அமைப்பாளர் லதா,சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டி, ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாநில செயலாளர் பாண்டி , மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மாரி நன்றி கூறினார்