ஈரோடு, ஜூன் 27: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வெங்கிடு தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சாமிகுணம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் உஷாராணி பங்கேற்று பேசினார். இதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகாவில் ராமசாமி தமிழ் கல்லூரியில் பணியாற்றும் அலுவலக உதவியாளரை தாக்கிய, தற்காலிக காவலர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், புகார் அளித்தவரை மிரட்டும் போலீஸ் எஸ்ஐ மீதும் தமிழ்நாடு அரசும், காவல் துறையையும் நடவடிக்கை எடுக்ககோரி கோஷங்கள் எழுப்பினர். இதில், தோழமை சங்க நிர்வாகிகளான ராஜசேகர், கண்ணன், குருநாதன், தங்கராஜ், ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.